புதிய பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் 
இந்தியா

பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ்- க்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ்-க்கு வாழ்த்துக்கள். தங்களுடைய தலைமையின் கீழ், இந்தியா – இங்கிலாந்து இடையேயான நட்புறவு மேலும் வலுபெறும் என்று நம்புகிறேன். உங்களுடைய புதிய பணி மற்றும் பொறுப்புகளை சிறப்பாக செய்ய வாழ்த்து என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்திய லிஸ் டிரஸ், அந்நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT