பெண்களுக்கு எதிரான குற்றங் கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், “உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்” என்று கோபத்துடன் கூறினார் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாதியின் தலைவர் முலாயம் சிங்.
உத்தரப் பிரதேச மாநிலம், பதான் மாவட்டத்தில் இரு சிறுமிகள் பலாத்காரம் செய்யப் பட்டு, கொல்லப்பட்டது தொடர் பாகவும், மாநிலத்தில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கிடம் செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முலாயம் சிங், “சமாஜ்வாதி கட்சியின் அரசு ஒன்றும் உணர்வற்றது அல்ல. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்” என்றார். அந்த மாநிலத்தில் நிகழ்ந்து வரும் குற்றங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருவதை விமர் சித்தே முலாயம் இவ்வாறு கூறி யுள்ளார்.
மாநில முதல்வரான அகிலேஷ் யாதவ் கூறும்போது, “இணையத்தில் பார்த்தால், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏராள மாக நிகழ்வதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் தான் அச்சம்பவங்கள் நடப் பதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன” என்றார்.
சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் கூறுகை யில், “தொலைக்காட்சி சேனல் கள், வக்கிரம், வன்முறை, ஆபாசம் நிறைந்த காட்சிகளை ஒளிபரப்பி வருவதே குற்றங்கள் அதிகரிக்க காரணம். இதுபோன்ற சம்பவங்கள் மற்ற மாநிலங்களிலும் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், அவற் றைப் பற்றி செய்தி வெளியிடாத ஊடகங்கள், உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுவதை மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.
பல இடங்களில் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான உறவு வெளியே தெரியவந்த உடனேயே அதை பாலியல் பலாத்காரம் என்று கூறிவிடு கின்றனர். சில இடங்களில் சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முயற்சித்தால், கவுரவக் கொலை செய்யப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது வருத்தமளிக்கிறது” என்றார்.