கடந்த 2010 அக்டோபர் 3 முதல் 14-ம் தேதி வரை தலைநகர் டெல்லி யில் காமன் வெல்த் விளை யாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி ஏற்பாடுகளில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இந்த ஊழல் விவகாரங்களை சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
இந்த ஊழல் தொடர்பான விசாரணை விவரங்களை அளிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் (சிவிசி) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிடிஐ செய்தி நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவுக்கு ஆணையம் அளித்துள்ள பதில் வருமாறு:
கோரப்படும் தகவல்கள் உட னடியாக எளிதில் கிடைக்க வழி யில்லை. பல்வேறு ஆவணங்களில் உள்ள தகவல்களை ஆராய்ந்து திரட்டுவதற்கு இந்த ஆணையத்தில் இருந்து கணிசமான ஊழியர்களை அனுப்ப வேண்டி வரும். எனவே விசாரணை விவரங்களை வழங்க முடியாது. இவ்வாறு சிவிசி பதில் அளித்துள்ளது.