இந்தியா

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழிக்க ஆளில்லா விமானம் மூலம் துல்லிய தாக்குதல்: இந்திய ராணுவம் புதிய வியூகம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் எல்லையில் அமைந் துள்ள தீவிரவாத முகாம்களை ஆளில்லா விமானம் மூலம் துல்லிய தாக்குதல் நடத்தி அழிக்க இந்திய ராணுவம் திட்டமிட் டுள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அண் மையில் துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்த னர். இதற்கு முன்பும் இதுபோன்ற துல்லிய தாக்குதல்களை நடத்தி யிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதல்களின்போது சில நேரங்களில் இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க அமெரிக்க பாணியில் ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாத முகாம்களை அழிக்க இந்திய ராணுவம் புதிய வியூகம் வகுத் துள்ளது.

இந்திய விமானப் படையிடம் இஸ்ரேல் தயாரிப்பான ஹெரோன் ஆளில்லா உளவு விமானங்கள் உள்ளன. இவை எல்லைப் பகுதி களில் கண்காணிப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளன. இந்த விமா னங்களில் அதிநவீன ஏவுகணை களைப் பொருத்தி ‘துல்லிய தாக்குதல்’ நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. இத்திட்டத்துக்கு ரூ.10,000 கோடி செலவாகும் என்று மதிப் பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

‘ஹெரோன் ஆளில்லா விமா னங்கள் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக்கூடியவை. அங்கிருந்து தீவிரவாத முகாம்களைத் துல்லிய மாக குறிவைத்து தாக்கி அழிக்க முடியும். இதன்மூலம் இந்திய வீரர்களின் உயிரிழப்பு முற்றிலுமாக தடுக்கப்படும்’ என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தீவிர வாத முகாம்களை அழித்து வரு கிறது. இந்த தாக்குதல் மூலம் இது வரை 2500-க்கும் மேற்பட்ட தீவிர வாதிகளை அமெரிக்க ராணுவம் கொன்றுள்ளது.

இதற்காக எம்.கியூ.-1 பிரிடேட் டர்ஸ் என்ற ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வருகிறது. அந்த பிரி டேட்டர்ஸ் விமானத்தை வாங்கவும் அமெரிக்க அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT