இந்தியா

அமெரிக்க தூதரின் அருணாச்சல் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு

பிடிஐ

அருணாச்சலப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் திபெத்தின் ஒரு பகுதி (தெற்கு திபெத்) என சீனா கூறி வருகிறது. இப்பகுதிக்கு இந்தியத் தலைவர் கள், வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் தலாய் லாமா செல்லும் போதெல்லாம் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு அழைப்பின் பேரில், அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா கடந்த 22-ம் தேதி அம்மாநிலத்தின் தவாங் நகருக்குச் சென்றார்.

திபெத் எல்லை அருகில் அமைந்துள்ள தவாங், முதல்வர் பெமா காண்டுவின் சொந்த ஊரா கும். இங்கு நடைபெற்ற 3 நாள் வருடாந்திர விழாவில் ரிச்சர்டு வர்மாவுடன் பெமா காண்டு, அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, “இந்தியா சீனா இடையிலான பிரச்சினைக் குரிய பகுதிக்கு அமெரிக்கத் தூதர் சென்றுள்ளார். அவரது பயணத்தை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். சீன இந்திய எல்லையின் கிழக்குப் பகுதி தொடர்பாக சீனாவின் நிலைப்பாடு தெளிவானது. சீனாவும் இந்தியா வும் எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயன்று வருகிறோம். எல்லையில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவச் செய்ய இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள முயற்சிகளை மூன்றாம் தரப்பினர் பொறுப்புணர் வுடன் மதிக்க வேண்டும்.

சீனா மற்றும் இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் நடத்தை எதிராக உள்ளது. இத னால் எல்லைப் பிரச்சினை மேலும் சிக்கலாவதுடன், எல்லைப் பகுதி யில் கடின முயற்சியால் பெறப் பட்ட அமைதியும் நல்லிணக்கமும் கெடும். மேலும் அமைதியுடன் கூடிய அப்பகுதியின் வளர்ச்சிக்கு எதிரான சதியாக இது அமையும்.

இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையில் தலை யிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கு உதவ வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT