இந்தியா

சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி எம்.பி.க்களிடம் விளக்கம்

பிடிஐ

இந்திய ராணுவம் எல்லை கடந்து சென்று நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட எம்பிக்கள் அடங்கிய குழுவிடம் விரிவாக விளக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து சென்று நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து எம்பிக்கள் குழுவிடம் வரும் 18-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) விரிவாக விளக்கப்படும்.

வெளியுறவு செயலர், உள் துறை செயலர், பாதுகாப்பு செயலர் மற்றும் ராணுவ நட வடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ஆகியோர் பங்கேற்று இந்திய பாகிஸ்தான் உறவு களுடன் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்கவுள்ளனர்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற நிலைக் குழு கூடும்போது, இந்த விளக்கக் கூட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT