இந்தியா

5-ம் தலைமுறை போர் விமானம்: ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து 5-ம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கும் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் கையெழுத்தாகும் என்று ரஷ்ய அரசு நிறுவனமான ரோஸ்டெக் தெரிவித்துள்ளது.

மணிக்கு 2200 கி.மீ. வேகத்தில் செல்லும் 5-ம் தலைமுறை போர் விமானத்தைச் சீனா உருவாக்கி உள்ளது. இதற்குப் போட்டியாக ரஷ்யாவுடன் இணைந்து 5-ம் தலை முறை போர் விமானத்தை உரு வாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் விரிவான ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து ரோஸ்டெக் தலைமை செயல் அதிகாரி செர்ஜி செம்சோவ், பிரிக்ஸ் மாநாட்டு வளாகத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: 5-ம் தலைமுறை போர் விமானத்தைத் தயாரிக்க இந்தியாவுடன் பேச்சுநடத்தி வரு கிறோம். இந்த ஆண்டு இறுதியில் ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும்.

பாகிஸ்தானுக்குப் பயணிகள் போக்குவரத்துக்கான ஹெலி காப்டர்களை மட்டுமே விநியோகம் செய்ய உள்ளோம். போர் விமானங் களையோ, ராணுவ ஹெலிகாப்டர் களையோ வழங்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT