இந்தியா

குஜராத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க சதி: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

செய்திப்பிரிவு

புஜ்: குஜராத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க சதி நடந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் புஜ் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மோடி அதன்பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது.

இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் குஜராத் மாநிலத்தின் பெருமைக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க சதி நடைபெற்றது. மேலும், இந்த மாநிலத்துக்கு வரும் முதலீடுகளை நிறுத்தவும் பலமுறை முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அதையெல்லாம் கடந்து குஜராத் மாநிலம் வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.

2001ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு கட்சை பேரழிவிலிருந்து மீட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்த அதி காரிகளுடன் இணைந்து கடினமாக உழைத்தோம். அதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.

2047-ல் வளர்ந்த நாடு

கட்ச் பகுதியை நிலநடுக்கபாதிப்பிலிருந்து மீட்டெடுப்பது முடியாத காரியம் என சிலர் பேசினார்கள். அந்த கருத்தை இந்த மக்கள் மாற்றியுள்ளனர். இந்தியாவில் தற்போது பல குறைபாடுகளை நீங்கள் காணலாம். ஆனால், 2047-ல் வளர்ந்த நாடாக மாறும் என்பது எனது தெளிவான பார்வை. இவ்வாறு பிரதமர் பேசினார்.

SCROLL FOR NEXT