இந்தியா

பணம், மது விநியோகம் தடுக்கப்படும்: தேர்தல் ஆணையம் உறுதி

செய்திப்பிரிவு

பஞசாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பணம், மது, போதை மருந்து விநியோகிப்பதை தடுக்க கடுமையான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் வரும் நவம்பர், டிசம்பரில் சட்டப்பேர வைத் தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் போதை மருந்து கொடுத்து வாக்காளர்களை மயக் கக்கூடும் என்பது மிகப்பெரிய பிரச் சினையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடு கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நேற்று சண்டிகர் சென்றார். அங்கு மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மது, பணம், போதை மருந்து கொடுத்து வாக்காளர்களை ஈர்த்தால் அது நேர்மையான, நடு நிலைமையான தேர்தலாக இருக் காது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எல்லா முயற்சிகளும் எடுக் கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கூறும் யோசனைகளைத் தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு செயல்படும்.

நேர்மையாக, நடுநிலைமை யாக தேர்தல் நடத்தப்படும். பாரபட்சமின்றி செயல்படுவோம். மது, பணம், போதை மருந்தைக் காட்டி வாக்காளர்களை வளைக்க முற்படக்கூடும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்த அச்சம் கவனத்தில் கொள்ளப்படும்.

காவல் துறை, உள்ளாட்சி நிர்வாகத்தினரை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சி கள் தெரிவித்துள்ளன. இவை கருத் தில் கொள்ளப்படும்.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது பஞ்சாப் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். தேர்தல் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த வீரர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு நஜீம் ஜைதி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT