இந்தியா

காஷ்மீர் எல்லையில் உயிரிழப்பை தவிர்க்க வீரர்களுக்காக சிறப்பு மருத்துவமனை: பாக். தாக்குதலில் மரணமடைந்த வீரரின் பெற்றோர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

காஷ்மீரின் கதுவா மாவட்டம், ஹிராநகர் செக்டாரில் சர்வதேச எல்லை அருகே கடந்த வெள்ளிக் கிழமை, பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குர்ணம் சிங் (26) படுகாயமடைந்தார்.

அங்கிருந்து, 90 கிமீ தொலை வில் உள்ள ஜம்மு அரசு மருத் துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட குர்ணம் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு இறந்தார். மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்த போது குர்ணம் சிங் உயிரிழந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

குர்ணம் தந்தை குர்பீர் சிங் கூறும்போது, ‘எல்லைப் பாதுகாப்புப் படையினருக்காக, எல்லை அருகிலேயே சிறப்பு மருத்துவமனை இருந்திருந்தால், குர்ணம் உயிர் பிழைத்திருப்பான்.

இதுபோன்ற தருணங்களில் வீரர்களின் உயிரை காப்பாற்ற சிறந்த மருத்துவமனையை அமைக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்றார்.

அசோக சக்ரா விருது

முந்தைய நாள் இரவு, எல்லை யில் பாகிஸ்தானின் பெரிய அளவி லான ஊடுருவல் முயற்சியை முறியடிப்பதில் குர்ணம் சிங் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். அதற்கு பழிதீர்க்கும் வகையில், மறுநாள் குர்ணம் சிங்கை குறி வைத்து பாகிஸ்தான் படையினர் தாக்கியுள்ளனர்.

குர்ணம் சிங்கின் பெயரை அசோக சக்ரா விருதுக்கு பரிந் துரை செய்யவும் பிஎஸ்எப் அதிகாரிகள் முடிவு செய்துள்ள னர். ஜம்முவில் உள்ள பிஎஸ்எப் தலைமையகத்தில் நேற்று நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் குர்ணமின் தாய் ஜஸ்வந்த் கவுர் கூறும்போது,

‘நான் இறந்தால் அழக்கூடாது என, அவன் என்னிடம் ஏற்கெனவே கூறியுள்ளான். எனவே, நான் அழமாட்டேன். நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்துள்ள என் மகனை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது’ என்றார்.

SCROLL FOR NEXT