அரசுப் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2.90 கோடி நஷ்டஈடு வழங்க மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி அருகே குர்காவ்னில் உள்ள நோக்கியா சீமன்ஸ் நிறு வனத்தில் ஆண்டுக்கு ரூ.27 லட்சம் சம்பளத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை மேலாளராக பணி புரிந்தவர் ராஜ்குமார் (36).
கடந்த, 2007 அக்டோபர் 21-ம் தேதி தனது மனைவி கோமல் மற்றும் 2 மகள்களுடன், ஹோண்டா சிட்டி காரில் அம்பாலாவிலிருந்து, டெல்லி நோக்கி வந்தார். குருஷேத்திரா அருகே, எதிரே வந்த ஹரியாணா அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மோதி கார் விபத்துக் குள்ளானது.
ராஜ்குமாரும், மூத்த மகள் சலோனியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயங்களுடன் உயிர் தப்பிய கோமல் மற்றும் இளைய மகள் சார்பில், ஹரியாணா அரசுப் பேருந்து ஓட்டுனருக்கு எதிராக, மோட்டார் வாகன இழப் பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த தீர்ப் பாய விசாரணை அதிகாரி அனூப் குமார், உயிரிழந்த ராஜ்குமார் குடும்பத்துக்கு, அரசுப் பேருந்தின் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ரூ.2.90 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
சாலையில் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக அரசுப் பேருந்தின் ஓட்டுனர் கூறிய காரணம், போலீஸ் விசாரணையில் பொய் யென உறுதி செய்யப்பட்டது. மேலும், பேருந்தை அதிவேகமாக வும், பொறுப்பற்ற முறையிலும் ஓட்டுனர் ஓட்டியதன் விளைவாகவே விபத்து ஏற்பட்டதும் உறுதி செய்யப் பட்டதை அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.