இந்தியா

சமாஜ்வாதி கட்சியில் இருந்து மேலும் ஒரு ஆதரவாளர் நீக்கம்: ஆளுநருடன் முதல்வர் அகிலேஷ் திடீர் சந்திப்பு

பிடிஐ

உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் ஆதரவாள ரான பவன் பாண்டேவை, கட்சியில் இருந்து நீக்கி மாநிலத் தலைவர் ஷிவ்பால் யாதவ் அதிரடி உத்தரவுப் பிறப்பித்தார். இந்தச் சூழலில் முதல்வர் அகிலேஷ் யாதவ் திடீரென ஆளுநரை தனியாக சந்திக்க சென்றதால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமாஜ்வாதி கட்சி மற்றும் குடும் பத்துக்குள் வாரிசு அரசியல் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில், நேற்று அகிலேஷின் ஆதரவாளரான பவன் பாண் டேவை, கட்சியில் இருந்து 6 ஆண்டு கள் நீக்குவதாக மாநிலத் தலைவ ரான ஷிவ்பால் யாதவ் அறிவித்தார். அத்துடன் அவரை அமைச்சரவை யில் இருந்து நீக்கும்படியும் அகிலே ஷுக்கு கடிதம் அனுப்பினார்.

அப்போது நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள ரத யாத்திரை குறித்து கட்சியினருடன் ஆலோ சனையில் ஈடுபட்டிருந்த அகிலேஷ் திடீரென அங்கிருந்து புறப்பட்டு ஆளுநர் ராம் நாயக்கை தனியாக சந்தித்தார். இதனால் உத்தரப் பிரதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் மாநிலத்தில் தற் போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து முழுமையாக விவரிக்கவே அகிலேஷ் ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித் தன. சமாஜ்வாதி வட்டாரங்களோ ஷிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச் சர்கள் நீக்கப்பட்டதால், காலியான அமைச்சர் பதவிகள் குறித்து ஆலோசனை நடத்த ஆளுநரை அகிலேஷ் சந்தித்ததாக கூறின.

முலாயம் சிங்கின் கட்டுப்பாட்டை மீறி அகிலேஷ் நடவடிக்கை எடுத்து வருவதால், பெரும்பாலான எம்எல்ஏக்கள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும், எனவே அது குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆளுநர் பணித்ததால், அகிலேஷ் அவரை சந்திக்கச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

எனினும் எம்எல்ஏக்களின் ஆதரவு பட்டியலை, அகிலேஷிடம் ஆளுநர் கேட்கவில்லை என்று உடனடியாக சமாஜ்வாதி தரப்பில் இருந்து மறுப்பு வெளியானது. இத னால் உத்தரப் பிரதேச அரசியலில் மீண்டும் உச்சகட்ட குழப்பநிலை உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT