ஆந்திரா-ஒடிஷா எல்லையில் நேற்று மீண்டும் மாவோயிஸ்ட் களுக்கும், ஆயுதப்படை போலீஸா ருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 2 பெண் மாவோயிஸ்ட்கள் உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆந்திரா-ஒடிஷா எல்லையில் உள்ள மல்காங்கிரி மாவட்டம், ராம்கூர்கா வனப்பகுதியில் மாவோ யிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆந்திரா மற்றும் ஒடிஷாவைச் சேர்ந்த கூட்டு ஆயுதப்படை போலீ ஸார் அவர்களைச் சுற்றி வளைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே விடிய, விடிய நடந்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில் 7 பெண்கள் உட்பட 24 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்ட்களின் முக்கியத் தலைவர்கள் சிலரும் பலியானதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ராம்கூர்கா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான தேடுதல் பணி தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதியில் பலிமெல எனும் இடத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஆயுதப் படையினரைக் கண்டதும் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு ஆயுதப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் வனப்பகுதிக்குள் பதுங்கி இருக்கலாம் என்பதால், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாவோயிஸ்ட் கள் துப்பாக்கிச் சூட்டில் பலியான கான்ஸ்டபிள் அபுபக்கரின் இறுதிச் சடங்குகள் விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது சொந்த ஊரான காஜுவாக்காவில் நேற்று நடந்தது.
ஆயுதப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் வனப்பகுதிக்குள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.