இந்திய சீன எல்லையைக் காக்கும் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் முதன்முறையாக ராணு வத்தில் பணிபுரியும் விலங்கு களுக்கும் பதக்கங்கள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன. இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் 55-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தண்டர்போல்ட் என்ற குதிரைக்கு ‘அனிமல் டிரான்ஸ்போர்ட்’ என்ற விருதும், சோபியா என்ற நாய்க்கு ‘கே9’ என்ற விருதும் அளிக்கப்பட உள்ளது.
இந்தோ திபெத் படைதான் முதன் முதலாக பெல்ஜியன் மலினோய்ஸ் ரக நாய்களை நக்ஸல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி யது. மேலும், 3,488 கி.மீ. நீளமுள்ள இந்திய சீன எல்லைக்குப் போக்கு வரத்துப் பயன்பாட்டுக்காக குதிரை, கோவேறு கழுதை, மட்டக் குதிரை களைப் பயன்படுத்தி வருகிறது.
“நாய்கள், குதிரைகள் மற்றும் இதர பிராணிகள் நமது ரகசிய ஆயுதங்கள் ஆகும். அவைகளின் சேவைக்காக நாம் நன்றி செலுத்துவது அவசியம்” என டெபுடி கமாண்டர் விவேக் கே பாண்டே தெரிவித்துள்ளார்.