இந்தியா

டாடா குழுமத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்: பிரதமருக்கு சுவாமி கடிதம்

பிடிஐ

டாடா குழுமத்திற்கு எதிராக எழுந்துள்ள புகார்களை விசாரிக்க பன்முகமை சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் இந்த பன்முகமை சிறப்பு விசாரணைக் குழுவில் சிபிஐ அதிகாரிகள், அமலாக்க இயக்ககம் மற்றும் செபி அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெளியேற்றப்பட்ட டாடா குழும சேர்மன் சைரஸ் மிஸ்திரி எழுப்பிய பல்வேறு புகார்கள் குறித்தும், குறிபாக ஏர் ஏஷியாவில் ‘பல்வேறு மோசடியான நடவடிக்கைகள்’ குறித்து எழுந்துள்ள புகார்களை விசாரிப்பது அவசியம் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தான் ஏற்கெனவே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஏர் ஏஷியா மற்றும் விஸ்தாரா ஏர்லைன்ஸில் ரத்தன் டாடா இந்திய கூட்டாளியாக பங்குவகிப்பது “நாட்டின் சட்டங்களுக்குப் புறம்பானது” என்று அவர் கூறியதை தன்னுடைய இந்தக் கடிதத்திலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏர் ஏஷியா இந்தியா நிறுவனத்தில் மோசடியான நடவடிக்கைகள் குறித்து வெளியேற்றப்பட்ட மிஸ்திரி கூறியதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், அனைத்து விவகாரங்களும் கவனிக்கப்படும், நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT