இந்தியா

தேசத்துக்கு காதி; தேசியக் கொடிக்கு சீன பாலியெஸ்டரா? - பிரதமருக்கு ராகுல் கண்டனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசத்துக்கு கதர் ஆடைகளைப் பரிந்துரைக்கும் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறார். பிரதமர் மோடியின் பேச்சும் செயலும் முரண்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று பிரதமர் காதி உத்ஸவ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குஜராத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழா நிறைவைக் கொண்டாடும் வகையில் 7500 பெண்கள் கை ராட்டையில் நூல் நூற்றனர். அப்போது பேசிய பிரதமர் மோடி காதி தேசம் தன்னிறைவடைய ஊக்க சக்தியாக இருக்கும் என்று பேசினார்.

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று தனது ட்விடரில், "தேசத்துக்கு கதர் ஆடைகளைப் பரிந்துரைக்கும் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறார். பிரதமர் மோடியின் பேச்சும் செயலும் முரண்படுகிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT