குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அடல் நடை மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். படம்: பிடிஐ 
இந்தியா

சபர்மதி பாலம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆற்றை பொதுமக்கள் கடக்க வசதியாக நடைபாலத்தை மாநில அரசு அமைத்துள்ளது.

கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பாலத்துக்கு அடல் நடைமேம்பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலை அகமதாபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடியை, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடைபெற்ற காதி உற்சவத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது 7,500 பெண்கள் ஒரே நேரத்தில் ராட்டையில் நூல் நூற்று வரலாற்றுச் சாதனை படைத்தனர்.

SCROLL FOR NEXT