ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடையில் டிராயரில் இருந்து பேன்ட்டாக மாறியதற்கு தன் மனைவி ராப்ரி தேவியின் விமர்சனமே காரணம் என பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் அமைப் பின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்போவதாக ஆர்எஸ்எஸ் அறி வித்திருந்தது. நேற்று முன்தினம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 91-வது ஆண்டு நிறுவன நாள் விழாவில் சீருடை மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த ஜனவரி மாதம் ராப்ரி தேவி, ஆர்எஸ்எஸ் உடை குறித்து விமர்சித்திருந்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள வயதானவர்கள் பொது இடத்தில் அரை டிரவுசர் போடுவதற்கு வெட்கப்படவில்லையா?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இது ஆர்எஸ்எஸ் அமைப்புக்குச் சங் கடத்தை உண்டாக்கியது. ராப்ரி யின் விமர்சனம் சீருடையில் மாற்றம் கொண்டு வர ஆர்எஸ்எஸ் அமைப்பை நிர்பந்தப் படுத்தியுள்ளது” என்றார்.
மேலும் லாலு ட்விட்டரில், “இப்போது பேன்ட் அணிய நிர்பந்தம் செய்துள்ளோம். அவர் களின் சித்தாந்தத்திலும் மாற்றம் தேவை. ஆயுதங்களைக் கைவிட அவர்களுக்கு நெருக்கடி கொடுப் போம். நஞ்சைப் பரப்ப அவர்களை அனுமதிக்க மாட்டோம்” என பதிவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் உட்பட மூத்த தலைவர்கள் குறித்த தெரிவித்த கருத்துகளுக்காக ராப்ரி தேவி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி, “ராப்ரி 19-ம் நூற்றாண்டு மனப் பான்மை கொண்ட ஒரு பெண்” என விமர்சித்துள்ளார்.
ராப்ரி தேவி