2014 ஆம் ஆண்டு எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் (கட்டுப்பாடு மற்றும் தவிர்த்தல்) மசோதா 2016ல் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது.
எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் மசோதா 2014 எச்.ஐ.வி.-யுடன் வாழ்பவர்கள், எச்.ஐ.வி.-யினால் பாதிக்கப்பட்டவர்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கு என வரையப்பட்டது. இந்த மசோதாவின் பிரிவுகள் எச்.ஐ.வி. தொடர்பான பாகுபாட்டு பிரச்சினைகளை தீர்க்கவும், தற்போதுள்ள திட்டங்களை வலுப்படுத்தவும் வழிவகை செய்கிறது. சட்டப்படியான பொறுப்பு ஏற்கும் முறையையும், புகார்களை விசாரிப்பதற்கு முறையான அமைப்புகளை உருவாக்கவும், மக்கள் குறைகளை களையவும் இது உதவும்.
இந்த மசோதா எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் வகை செய்கிறது. மேலும் எச்.ஐ.வி. எயிட்ஸ் பாதித்த நபர்களுக்கு எதிரான பாகுபாட்டை தடைசெய்கிறது, அவர்களது சிகிச்சை தொடர்பாக அறிவார்ந்த சம்மதத்தை பெற்று ரகசியத்தை காக்க உதவுகிறது. நிர்வாகத்தினர் எச்.ஐ.வி. பாதித்தவர்களது உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்படுத்துகிறது, புகார்களை களைவதற்கான அமைப்பை உருவாக்குகிறது. சுகாதார சேவைகள் கிடைப்பதை அதிகரிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. எச்.ஐ.வி. தொடர்பான பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான அறிவார்ந்த சம்மதத்தையும், ரகசியத்தையும் இம்மசோதா உறுதி செய்கிறது.
எச்.ஐ.வி. அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கும், எச்.ஐ.வி.-யுடன் வாழ்பவர்களுக்கும் எதிரான பாகுபாடுகளுக்கான பல்வேறு காரணங்களை இந்த மசோதா பட்டியலிடுகிறது. இவற்றில் மறுப்பு, முடிவுக்கு கொண்டுவருதல், சிகிச்சையை கைவிடுதல், நியாயமில்லாத சிகிச்சை ஆகியன அடங்கும். இவை கீழ்கண்டவை தொடர்பானவை:
(1) வேலை வாய்ப்பு
(2) கல்வி நிறுவனங்கள்
(3) சுகாதாரப் பராமரிப்பு சேவைகள்
(4) வீடுகளில் தங்கியிருத்தல் அல்லது வாடகைக்குப் பெறுதல்
(5) பொது மற்றும் தனியார் பதவிகளுக்குபோட்டியிடுதல்
(6) காப்பீடு வசதி பெறுதல் (காப்பீடு ஆய்வுகள் அடிப்டையில் இல்லாத நிலையில்).வேலை வாய்ப்புபெறுதல் அல்லது சுகாதார சேவைகள், கல்வி பெறுதல் ஆகியவற்றுக்கு முன் நிபந்தனையாக எச்.ஐ.வி. சோதனை தேவை என்பது தடை செய்யப்படுகிறது.
18 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி. பாதித்த நபர் பகிர்ந்து கொள்ளப்பட்ட வீடுகளில் வசிக்கவும், அந்த வீடுகளின் வசதியை அனுபவிக்கவும் உரிமை உள்ளவர்.
தனி நபர்கள் எச்.ஐ.வி. பாதித்தோருக்கும், அவருடன் வாழ்பவர்களுக்கும் எதிரான உணர்வுகளை ஆதரிப்பது அல்லது தகவல்களை வெளியிடுவது ஆகியவற்றையும் இந்த மசோதா தடை செய்கிறது. சிறுவர் சிறுமியருக்கு பாதுகாவலர் வசதி கிடைப்பதற்கும் மசோதா வகை செய்கிறது. 12 முதல் 18 வயது வரையிலான எச்.ஐ.வி. அல்லது எயிட்ஸ் பாதித்த குடும்பத்தின் விவகாரங்களை புரிந்து கொண்டு நிர்வகிக்கும் முதிர்ச்சியுள்ள எந்த நபரும் 18 வயதிற்குட்பட்ட அந்த குடும்பத்தில் உள்ள வேறு ஒரு நபருக்கு பாதுகாவலராக செயல்பட தகுதியுள்ளவர். இந்த நிலைமை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வங்கிக் கணக்குகளை செயல்படுத்துதல், சொத்தை நிர்வகித்தல், பராமரிப்பு மற்றும் சிகிச்சை போன்றவற்றுக்கு பெரிதும் உதவும்.
எந்தவொரு நபரும் தனது எச். ஐ. வி. நிலவரத்தை வெளிப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தப்படக் கூடாது, நீதிமன்ற உத்தரவு
இதற்கு விதிவிலக்கு என்று இந்த மசோதா வலியுறுத்துகிறது. எச். ஐ. வி. நபர்கள் தொடர்பான தகவல்களை ஆவணமாக வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்தத் தகவல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த மசோதாவின்படி, மத்திய மாநில அரசுகள் கீழ்கண்ட நடவடிககைகளை எடுக்க வேண்டும்.
(1) எச். ஐ. வி. அல்லது எயிட்ஸ் பரவுவதைத் தடுத்தல்
(2) எச். ஐ. வி. அல்லது எயிட்ஸ் பாதித்த நபர்களுக்கு வெட்ரோ வைரல் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் நோய் தொற்று நிர்வாகம் ஆகியவற்றை வழங்க வேண்டும்
(3) நலத்திட்டங்கள் குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்களின் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
(4) வயதுக்கு உகந்த, பாலின உணர்வுடன் கூடிய, குறை கூறுவதைத் தவிர்க்கும் எச். ஐ. வி. அல்லது எயிட்ஸ் கல்வி தகவல் தொடர்பு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
(5) எச். ஐ. வி. அல்லது எயிட்ஸ் உள்ள குழநதைகளுககு சிகிச்சை மற்றும் பராமரிப்பு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். அரசுகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாவலில் உள்ள ஒவ்வொரு நபரும் எச். ஐ. வி. தடுப்பு, பரிசோதனை, சிகிச்சை, ஆலோசனைகள் பெற உரிமை உள்ளவர்கள். எச். ஐ. வி. பாதித்த நபர்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைப்பதுடன், தேவையான ரகசிய தன்மையை பராமரிக்க வேண்டும்.
இந்த மசோதா காரணமாக நிதிச் செலவினங்கள் ஏதும் இல்லை. இதன்படியான பல செயல்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருபவை அல்லது தற்போதுள்ள அமைச்சகங்களின் பயிற்சி, தகவல் தொடர்பு, தகவல் நிர்வாகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கக் கூடியவை. இந்த சட்டத்தை மீறுவோர்கள் மீதான புகார்கள் தொடர்பான விசாரணை செய்ய மாநில அரசுகள் குறைதீர்ப்பு அமைப்பை நியமிக்க இந்த மசோதா வகை செய்கிறது. இந்த அமைப்பு உத்தரவை அமல்படுத்தாதவர்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த குறை தீர்ப்பு அதிகாரி தனியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, பதவியில் உள்ள மாநில அரசு அதிகாரி எவருக்கும் கூடுதல் பொறுப்பாக இதனை வழங்கலாம்.
இந்தியாவில் சுமார் 21 லட்சம் பேர் எச். ஐ. வி. பாதிப்புடன் வாழ்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டில் எச். ஐ. வி. பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும், இந்த மசோதா தேசிய எயிட்ஸ் கட்டுப்பாடு திட்டத்திற்கு இந்த வகையிலான நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான முக்கிய ஆதரவை மசோதா வழங்குகிறது. இதனால், நிலைத்த மேம்பாட்டு இலக்குகளின்படி வரும் 2030-க்குள் இந்த நோய் பரவலைத் தடுக்கும் நோக்கத்திற்கு இந்த மசோதா உதவும்.