இந்தியா

நாடு முழுவதும் கீழ் நீதிமன்றங்களிலும் 5,000 நீதிபதி பணியிடம் காலி

பிடிஐ

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன் றங்களில் நீதிபதிகள் பணியிடங் கள் காலியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், கீழ் நீதிமன்றங்களின் நிலைமையும் அதை விட மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய சட்ட அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் உள்ள கீழ் நீதிமன்றங்களில் 5,111 நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் இருப்ப தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை கீழ் நீதிமன்றங்களில் 21,303 ஆக இருக்க வேண்டிய நீதிபதிகளின் பலம், 16,192 ஆக மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5,111 நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதால் கீழ் நீதிமன்றங்களிலும் நீதித் துறை சார்ந்த பணிகள் தேக்க மடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான பெரிய மாநிலங்களில் கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிகள் உயர் நீதிமன்றங்களின் வாயிலாகவே நிரப்பப்பட்டு வருகின்றன. 17 மாநிலங்களில் மட்டும் அந்தந்த மாநில அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் நிரப்பப்படுகிறது.

நீதிபதிகள் பற்றாக்குறையில் குஜராத் மாநிலம் தான் முதலிடம் வகிக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் 794 நீதிபதி பதவிகள் காலி யாக உள்ளன. இதைத் தொடர்ந்து பிஹாரில் 792, உத்தரப் பிரதேசத் தில் 595 பதவிகள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களிலும் 450 நீதிபதிகளுக்கான பதவிகள் காலியாக உள்ளன. இதனால் நாடு முழுவதும் 3 கோடி வழக்கு கள் பைசல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT