ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயது மன்மீத் அலிஷர் என்ற பேருந்து ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபரால் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபி சமூகத்தினரிடையே நல்ல பாடகராக திகழ்ந்த மன்மீது அலிஷர் பிரிஸ்பன் சிட்டி கவுன்சில் பேருந்தை ஓட்டி வந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் ஓட்டுநர் மீது எரியும் பொருள் ஒன்றை விட்டெறிய தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார்.
அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறிய படியே பேருந்தின் பின்கதவு வழியாக தப்பினர்.
இது தொடர்பாக 48 வயது நபர் ஒருவரை பிரிஸ்பன் போலீஸ் கைது செய்தனர். ஆனால் இது நிறவெறித் தாக்குதல் இல்லை என்கிறது பிரிஸ்பன் போலீஸ். தீவிரவாதத் தாக்குதல் என்பதற்கான ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பிரிஸ்பன் போலீஸ் கூறுகிறது.
இதற்கிடையே பிரிஸ்பன் வாழ் பஞ்சாபி சமூகத்தினர் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.