இந்தியா

எல்லையில் பாக்.ராணுவத் தாக்குதல்களால் வாழ்வாதாரம் பறிபோகிறது: கிராமவாசி வேதனை

பிடிஐ

காஷ்மீர் ஆர்.எஸ்.புரம் பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தானிய படையினர் நடத்திய தீவிர துப்பாக்கிச் சூட்டினால் கால்நடைகளை இழந்த கிருஷண் லால் என்ற நபர் தனக்கு இனி வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்று வேதனையடைந்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கிருஷண் லால் கூறும்போது, “உங்களைப் பொறுத்தவரை கால்நடைகள் விலங்குகள், என்னைப் பொறுத்தவரை இவை என்னுடைய மகன்கள், நான் பால் கறந்து பிழைத்து வந்தேன், இப்போது அது துப்பாக்கிச் சூட்டில் பலி. இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பு” என்று வேதனையடைந்துள்ளார்.

நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் கிருஷண் லால் மாட்டுக் கொட்டகையருகே மார்டர் ஷெல் அடித்ததில் 3 எருமை மாடுகள் மற்றும் ஒரு பசுமாடு பலியாகியுள்ளன.

பிஎஸ்எப் வீரர் ஒருவர் ஸ்னைபர் தாக்குடஹ்லில் படுகாயமடைந்த செய்திகளை அடுத்து சதுவா பிரிவில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 ரேஞ்சர்கள் மற்றும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக தெரிவித்ததையடுத்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் பாகிஸ்தான் பெரிய அளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பல ஷெல்கள் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நேற்று இரவு கொரொடானா குர்த் மற்றும் புதிபுர் ஜாட்டன் ஆகிய பகுதிகளில் விழுந்தது. உயிர்ப்பலி ஏற்படாவிட்டாலும் கிருஷண் லாலின் வாழ்வாதாரமான கால்நடைகள் இதில் பலியாகின.

இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் பலமுறை பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில், ஷெல் தாக்குதல்களில் கால்நடைகள் பலவற்றை பலர் இழந்துள்ளனர்.

“விவசாய வருவாய் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இருமுறையே கிடைக்கும், ஆனால் இந்த பசு, எருமை மாடுகளின் பால்தான் எங்களுக்கு வாழ்வாதாரமே. நாங்கள் ஏழைகள், எங்கள் மாதவருவாய் இதில்தான் உள்ளது” என்று கிருஷண்லால் கண்களில் நீர் மல்க செய்தியாளரிடம் தெரிவித்தார்.

மேலும், குல்பிர் சிங் என்ற மற்றொரு இதே பகுதிவாசி கூறும்போது, “போர்நிறுத்தம் மீறப்படும்போதெல்லாம் கிராமத்தில் கால்நடைகளை இழந்து வருகிறோம். மேலும் துப்பாக்கிச் சூடு நடக்கும் போது கிராமத்தினர் பதுங்குக் குழிகளுக்குள் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் கால்நடைகள் என்ன செய்யும்? பலியாகின்றன” என்றார்.

டிவிஷினல் கமிஷனர் பவன் கோட்வால் கூறும்போது, கால்நடைகள் இழப்பு ஏற்பட்டால் கிராமவாசிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது என்றார்.

SCROLL FOR NEXT