இந்தியா

ஒடிஷாவில் மேலும் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

சுமித் பட்டாசாரி

ஆந்திர - ஒடிஷா எல்லையில் இன்று (செவ்வாய்க்கிழமை) போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முன்னதாக, இதே பகுதியில் நேற்று நடந்த மோதலில் 24 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர – ஒடிஷா எல்லையோர மாவட்டமான மல்காங்கிரியில் அந்திர - ஒடிஷா ஆயுதப்படை போலீஸார் நடத்திய சிறப்புத் தேடுதல் வேட்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் மல்காங்கிரி தலைமை காவல் அதிகாரி மித்ரபானு மொகபத்ரா, விசாகப்பட்டினம் தலைமை காவல் அதிகாரி ராகுல் தேவ் சர்மா ஆகிய இருவராலும், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இன்று நடத்தப்பட்ட தாக்குதலை உறுதிப்படுத்த முடியவில்லை.

மேலும், மல்காங்கிரியில் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் அறியப்பட்டு வருகிறது என ஆந்திர – ஒடிஷா போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆந்திரா - ஒடிஷா மாநில எல்லைப் பகுதியில் திங்கட்கிழமை பதுங்கி இருந்த 7 பெண்கள் உட்பட 24 மாவோயிஸ்டுகள் ஆயுதப்படை போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT