இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களுக்கும் தீங்கு எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்றும் அவர்களை மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
நஜாஃப் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை பணியில் அமர்த்தியவர்கள் பாஸ்போர்ட்களை திரும்பத் தர மறுத்து வருவதாகவும் ஆம்னெஸ்ட்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
பாக்தாத்தில் உள்ள இந்திய அரசின் குழு சம்பந்தப்பட்ட நிறுவனத்த்தைத் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் இவர்களது பாஸ்போர்ட் விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய தூதரகத்திலிருந்து அதிகாரிகள் சென்று ஊழியர்கள் முன்னிலையில் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று ஆம்னெஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கடத்தப்பட்டவர்கள் பற்றிய அடையாள விவரம் தெரியவந்துள்ளது என்றும் இது தொடர்பாக இராக்கில் உள்ள செம்பிறை அமைப்புடன் இந்திய அரசு தொடர்பில் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
40 இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்களை மொசூலிலிருந்து சன்னி தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அதில் ஒருவர் தீவிரவாதிகள் பிடியிலிருந்து தப்பிவிட்டார்.