காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்தலுக்கு முன்பே அமைக் கப்பட்டது. அக்கூட்டணிக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து பெறுவதற்கு தேவையான எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் உள்ளனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்த் சர்மா கூறியதா வது: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்தலுக்கு முன்பாக அமைக்கப் பட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கான போது மான எண்ணிக்கை உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியோ, ஐக்கிய முற்போக் குக் கூட்டணியோ இரண்டுமே தேர்தலுக்கு முந்தைய கூட்டணி. குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டவை.
இதுதொடர்பான முடிவு எடுப்பதற்கு முன்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச் சர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது, மக்களவைத் தலைவரின் தனிப்பட்ட உரிமை என்றார்.
மாவலங்கர் யுக்தி
எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்படாவிட்டால், இந்தியாவின் முதல் மக்களவைத் தலைவர் ஜி.வி. மாவலங்கரின் கருத்தை, காங்கிரஸ் முன்வைக்கும் எனத் தெரிகிறது.
1977-ம் ஆண்டு நாடாளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2002-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி அதிக எம்பி.க்களைக் கொண்ட கட்சி எதிர்க் கட்சி அந்தஸ்தைப் பெற்றுவிடும்.