குஜராத்தில் படேல்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக பாஜக செயல்படுவதால் அந்தக் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில், ‘பாஜக இந்துக்களுக்கான கட்சி என்று கோருகிறது ஆனால் படேல்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. ஜூலை 2015-ல் நடந்த போராட்டத்தில் சுமார் 12 பேர் கொல்லப்பட்டனர்.
உனாவில் தலித்துகள் அடித்து உதைக்கப்பட்டனர். அவர்கள் இந்துக்களாக இருப்பினும் தாக்கப்பட்டனர். அங்கு அரசாங்கம் இருந்தாலும் டெல்லியிலிருந்தே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.
பணம் மற்றும் அதிகாரத்தை பின் தொடர்ந்து செல்கிறது பாஜக’ என்று சாடியுள்ளார் கேஜ்ரிவால்.