இந்தியாவில் தகவல் தொடர்பு சேவைக்காக ஏற்கெனவே 14 செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் ஏவி உள்ளது. இந்நிலையில், தொலைக்காட்சி, ராணுவம், விசாட், மின்னணு செயற் கைக்கோள் செய்தி சேகரிப்பு, தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், ஜிசாட்-18 என்ற செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் உருவாக்கினர். சுமார் 3,404 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளில் மொத்தம் 48 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தச் செயற்கைக்கோளை வடிவமைக்க ரூ.1,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியான் ஸ்பேஸ் ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோளை கடந்த புதன்கிழமை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திடீர் மேக மூட்டங்கள் காரணமாக திட்டம் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நேற்று அதிகாலை 2 மணிக்கு பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஜிசாட்-18 செயற்கைக்கோள் விண் ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் விண்ணில் 15 ஆண்டுகளுக்கு சேவை வழங்கும். இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறும்போது, ‘‘ஜிசாட்-18 செயற்கைக்கோள் இந்திய தகவல் தொடர்புக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஏற்கெனவே அனுப்பிய செயற்கைக் கோள்களுக்கு வயதான நிலையில், தகவல் தொடர்பு சேவை தடங்க லின்றி தொடர இந்தச் செயற்கைக் கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.
செயற்கைக்கோள் வெற்றிகர மாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப், பிரதமர் மோடி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.