இந்தியா

ரஷ்யாவின் தோழமை நாடு இந்தியா: அதிபர் விளாடிமிர் புதின் புகழாரம்

செய்திப்பிரிவு

கோவாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு வரும் 15, 16-ம் தேதி களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் இன்று கோவா வருகிறார். இதை முன்னிட்டு ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அதிநவீன ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் ரஷ்யா முன்னணியில் உள்ளது. பிரம்மோஸ் ஏவுகணை, ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தயாரிப்பு ஆகிய திட்டங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்திய, ரஷ்ய உறவு வர்த்தகம் சார்ந்தது அல்ல. சமூக, பொருளாதார வளர்ச்சி சார்ந்தது.

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா போரிட்டு வருகிறது. அதற்கு ரஷ்யாவும் இதர பிரிக்ஸ் நாடுகளும் துணை நிற்கும்.

மத்திய கிழக்கு நாடுகள் பிரச்சினைகள், தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களுக்கு மூலக் காரணம் அமெரிக்கா. சிரியாவில் உள் நாட்டுப் போர் தீவிரமடைந் துள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

ஆனால் நாங்கள் சிரியாவில் மனிதாபிமான பணிகளை மேற் கொண்டு வருகிறோம். அலெப்போ நகருக்கு உணவு, மருந்து பொருட்கள் தட்டுப் பாடின்றி கிடைக்க பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

உலகளாவிய அளவில் பல்வேறு அமைப்புகளில் மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஒரு தலைப்பட்சமாக செயல்படு கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற் காகவே பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட் டமைப்பு சர்வதேச அரங்கில் வலுப்பெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT