இந்தியா

கணவனுக்கு பாலியல் உறவை மறுப்பது விவாகரத்துக்குரியதே: டெல்லி உயர் நீதிமன்றம்

பிடிஐ

எந்த ஒரு நியாயமும், காரணமுமின்றி நீண்ட காலம் கணவனுக்கு மனைவி பாலியல் உறவை மறுப்பது விவாகரத்திற்குரியதே என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

நான்கரை ஆண்டுகளாக தனக்கு பாலியல் உறவை காரணமில்லாமல் மறுத்து மனரீதியாக கொடுமை இழைத்ததாக கணவர் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய மனு செய்திருந்தார். அதாவது தன் மனைவிக்கு உடல் ரீதியாக எந்த ஒரு உபாதைகளும் இல்லை என்பதையும் அவர் தன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், விசாரணை நீதிமன்றத்தில் கணவனின் இந்தக் குற்றச்சாட்டை மனைவி மறுக்கவில்லை என்பதை கவனத்தில் எடுத்து கொண்ட உயர் நீதிமன்றம், “மனைவி தனக்கு மனரீதியாக நீண்ட காலமாக கொடுமை இழைத்து வந்துள்ளார் என்பதை கணவர் ஐயத்திற்கிடமின்றி நிறுவியுள்ளார். ஒரே வீட்டில் வசித்து நீண்ட காலமாக கணவனுக்கு பாலியல் உறவை மறுப்பது எந்தவொரு நியாயமுமற்ற மனரீதியான கொடுமை இழைத்தலே. மேலும் மனைவிக்கு எந்த வித உடற்கோளாறுகளும் இல்லை என்பதையும் கவனத்தில் எடுத்து கொள்வதால் கணவனின் விவாகரத்து கோரிக்கையை இந்த கோர்ட் ஏற்றுக் கொள்கிறது” என்று தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, இந்து திருமணச் சட்டத்தின்படி கொடுமை இழைத்ததற்கான சந்தர்ப்பங்கள் திருப்திகரமாக இல்லை என்று கூறி கணவனின் விவாகரத்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து தற்போது கணவர் உயர் நீதிமன்ற தீர்ப்பை தனக்கு சாதகமாகப் பெற்றுள்ளார்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT