இந்தியா

இமாச்சலப் பிரதேச வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சிம்லா: கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 22 பேர் பலியாகினர். 5 பேர் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் சுதேஷ் குமார் மோக்தா கூறுகையில், "மாநிலத்தில் அதிகபட்சமாக, மண்டி, கங்ரா, சம்பா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மழைத் தொடர்பாக 36 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மழை காரணமாக, மண்டியிலுள்ள மண்டி - சண்டிதர் தேசிய நெடுஞ்சாலை, ஷோகியுள்ள சிம்லா - சண்டிகத் நெடுஞ்சாலை உள்ளிட்ட 743 சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

துணை கமிஷனர் அரிந்தம் சவுத்ரி கூறுகையில், “மண்டியில் மட்டும் கனமழை காரணாக உருவான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 உயிரிழந்துள்ளனர்; 5 பேரை காணவில்லை.

காஷன் கிராமத்தில் உள்ள ஹோகர் வளர்ச்சி பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் போலீசாரும் இணைந்து நீண்ட தேடுதலுக்குப் பின்னர் நிலச்சரிவில் இடிந்து போன ஒரு வீட்டின் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரின் உடல்களை மீட்டனர்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT