இந்தியா

இந்திய எண்ணெய் நிறுவனங்களை உளவு பார்க்கும் பாக்.

செய்திப்பிரிவு

காஷ்மீரின் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆக்கிர மிப்பு காஷ்மீரில் 7 தீவிரவாத முகாம்களை இந்திய வீரர்கள் அழித் தனர். இதனால் இருநாடுகளிடையே பதற்றம் நீடிக்கிறது.

அண்மையில் ராஜஸ்தானில் உள்ள எண்ணெய் நிறுவனத்தின் மூத்த அதிகாரியுடன் தொலை பேசியில் பேசிய பாகிஸ்தான் உளவாளி, இந்திய உளவுப் பிரிவான ரா அமைப்பின் ஏஜென்ட் என்று அறிமுகம் செய்து முக்கிய விவரங்களைக் கேட்டுள்ளார்.

இதேபோல நாடு முழுவதும் செயல்படும் இந்திய எண்ணெய் நிறுவன ஆலைகள் குறித்து பாகிஸ் தான் உளவாளிகள் வேவுபார்த்து வருகிறது என்று மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிக எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும், பாது காப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT