இந்தியா

‘ஏ தில் ஹை முஷ்கில்’ திரைப்பட விவகாரம்: ராணுவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- ராஜ் தாக்கரேவுக்கு அதிகாரிகள் கண்டனம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் சமீபத்தில் துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டதால் ராணுவம் ஏற்கெனவே அதிருப்தி அடைந்திருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் நடிகர் பவத் கான் நடித்திருப்பதாகக் கூறி கரண் ஜோஹரின் ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படத்தை வெளியிட மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித் தார். இதையடுத்து, மாநில முதல்வர் முன்னிலையில் நேற்று முன்தினம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், தனது 3 கோரிக்கைகளை ஏற்பதாக பாலிவுட் திரை உலகம் ஒப்புக் கொண்டதையடுத்து, அந்த திரைப்படத்துக்கான எதிர்ப்பை கைவிடுவதாக ராஜ் தாக்கரே தெரிவித்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதி யையும் பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த வேறு படங்களை வெளியிட வேண்டுமானால், அதன் தயாரிப் பாளர்கள் ரூ.5 கோடியையும் ராணுவ நல நிதிக்கு தர வேண்டும் என்ற நிபந்தனையும் அடக்கம்.

இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அரசியல் சாராத ராணுவத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். இதுபோன்ற கீழ்த்தர மான அரசியலுக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.

மற்றொரு உயர் அதிகாரி கூறும் போது, “ராணுவ நல நிதிக்கு தாமாக முன்வந்து நன்கொடை வழங்கினால் ஏற்றுக் கொள்வோம். வறுபுறுத்தல் அல்லது மிரட்டல் காரணமாக வழங்கப்படும் நிதியை ஏற்க மாட்டோம்” என்றார்.

மேலும், முன்னாள் ராணுவ வீரர்கள் ட்விட்டரிலும் ராஜ் தாக்கரே வுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT