இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உடன் இணைந்து தேசிய கீதத்தை பாடிய அகதிகள். 
இந்தியா

தேசிய கீதத்தை பாடிய அகதிகள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 12 அகதிகள், கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உடன் இணைந்து தேசிய கீதத்தை பாடியுள்ளனர்.

சுதந்திர தினத்தையொட்டி இந்தியர்கள் பல்வேறு வகைகளில் தங்களது தேச பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 12 அகதிகள் தங்களது இந்திய நேசத்தை தேசிய கீதத்தை பாடி வெளிப்படுத்தி உள்ளனர்.

மியான்மரை சேர்ந்த ஆரா ரெம் மாவி, லென் நுயாம், விக்டர், மரியா, முன்பி, சான் சான், இலங்கையை சேர்ந்த திசாந்தனா, கேமரூனை சேர்ந்த ஒடிட்டி, ஆப்கானிஸ்தானை சேர்ந்த அப்துல்லா, அகுலா, சேயாஸ் ஆகியோர் இந்தியாவில் அகதிகளாக தஞ்மடைந்து உள்ளனர். கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உடன் இணைந்து, இவர்கள் 12 பேரும் தேசிய கீதத்தை மெய்சிலிர்க்க பாடியுள்ளனர்.

SCROLL FOR NEXT