இந்தியா

அரசு வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்: முன்னாள் போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

பிடிஐ

ஓய்வுபெற்ற பிறகும் அரசு வாகனங்களைப் பயன்படுத்தி வரும் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அவற்றை ஒப் படைக்காவிட்டால், சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஓய்வுபெற்ற பிறகும் போலீஸ் அதிகாரிகள் சிலர் தங்கள் வீடுகளில் பாதுகாவலர்கள் உட்பட ஏராளமான காவலர் களைப் பணியில் (சொந்த) ஈடுபடுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுபோல, பல ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் அரசு வாகனங் களைப் பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற செயல் பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக வும் அடிப்படை ஒழுக்கம் மற்றும் அரசுப் பணி ஒழுக்கத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு விரும்புகிறது.

எனவே, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இதுபோன்ற சலுகைகளை ஒரு மாதத் துக்குள் திரும்பப் பெற வேண்டும். இதை மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ்/மத்திய போலீஸ் துறை மற்றும் மாநில காவல் துறை ஆகியவற்றின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த உத்தரவை மதிக்காத ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கா விட்டால் பணியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT