இந்தியா

பாகிஸ்தான் படகு பறிமுதல்

பிடிஐ

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் ராவி நதியில் மிதந்து வந்த, பாகிஸ்தானிய வெறும் படகு ஒன்று எல்லைப் பாதுகாப்பு படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது.

இந்தப் படகில் ஆட்கள் எவரும் இல்லை. மேலும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான பொருட்கள் எதுவுமில்லை என்று பிஎஸ்எப் கூறியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் எல் லையில் கண்காணிப்பு தீவிரப்படுத் தப்பட்டுள்ள வேளையில் இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்எப், பஞ்சாப் பிராந்திய டிஐஜி ஆர்.எஸ்.கட்டாரியா கூறும்போது, “நங்கூரத்துடன் காணப்பட்ட இந்த வெறும் படகு வெள்ளத்தில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். ராவி நதியில் திங்கள்கிழமை அதிக நீர்வரத்து இருந்தது. ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, இதுபோன்ற பொருட்களும், சில நேரங்களில் விலங்குகளும் அடித்துவரப்படுவது உண்டு” என்றார்.

கடந்த 2-ம் தேதி குஜராத் கடற் பகுதியில் பாகிஸ்தானிய படகு ஒன்று 9 பேருடன் கடலோர காவல் படையால் சுற்றி வளைக்கப் பட்டது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களில் இந்தியப் பகுதிக்குள் மீண்டும் பாகிஸ்தானிய படகு சிக்கியுள்ளது.

SCROLL FOR NEXT