புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர விழாவை கொண்டாடும் விதமாக வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் சூழலில் இந்திய தபால் துறை மூலம் ஆன்லைனில் தேசியக் கொடியை ஆர்டர் செய்து பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் வீட்டில் கொடியை ஏற்ற விரும்பும் மக்கள் ஆன்லைன் வழியே இந்திய அஞ்சல் துறை மூலம் மூவர்ணக் கொடியை ஆர்டர் செய்து, டெலிவரி தொகைக்கான கட்டணம் கூட இல்லாமல் பெற முடியும். அது எப்படி என்பதை பார்ப்போம்.
20X30 இன்ச் அளவு கொண்ட தேசிய கொடியின் விலை ரூ.25 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆன்லைன் வழியாக அதிகபட்சம் 5 கொடிகள் வரை ஆர்டர் செய்து பெறலாம்.
ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி?