நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் இன்று முஹர்ரம் தினத்தைக் கடைபிடிக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவு கூர்ந்து கருத்தை பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகங்களை நினைவுகூர்கின்ற நாள் இது. சத்தியத்தின் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவராவார். அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்காக ஹுசைன் நினைவுகூரப்படுகிறார். அவர் சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்தார்" என்று பதிவிட்டுள்ளார்.
இஸ்லாமிய நாட்காட்டியில் முதலாவது மாதம் முஹர்ரம். இது முஸ்லிம்களின் வரலாற்றிலும் வாழ்க்கையிலும் செல்வாக்கு பெற்ற மாதம். முஹமது நபி (ஸல்) அவர்களும், தீர்க்கதரிசிகளும், மற்ற தூதர்களும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லப்படு கிறது. எனினும், ஷியா முஸ்லிம்கள் இதனைத் ‘துக்கமான’ மாதம் என்கின்றனர்.
கி.மு.680-ல் கர்பாலா போரில்72 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். கடைசி இறைத்தூதர் ஹளரத் முஹம்மத்(ஸல்) பேரர் ஹளரத் இமாம் ஹூசைன் கர்பாலா போரில் கொல்லப்பட்டார். அவருடன் 71 பேர் யஜீதின் ராணுவத்தினரால் முஹ்ர்ரம் மாதம் 10-வதுநாளில் கொல்லப்பட்டனர். இமாம்ஹூசைனின் 6 மாத மகன் அஸ்கரும் அந்த நாளில் கொல்லப் பட்டார்.
கர்பலா போர் என்பது ஹளரத்இமாம் ஹூசைனுக்கும் கொடுங்கோலன் கலிஃபா யஜூதுக்கும் இடையே நடந்த போர். இந்த நாளைஇமாம் ஹூசைன் உயிர்த்தியாகம் செய்த நினைவுநாளாக முஸ்லிம்கள் கருதுகின்றனர். ஆனால், ஷியா முஸ்லிம்கள் இதனை துக்க தினமாகக் கருதி ‘ஆஷுரா’ நாள் என்று கூறுகின்றனர்.