ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கும் தர்மபுரி எம்பி செந்தில்குமார் 
இந்தியா

ரயில்களில் தாய்ப்பால் ஊட்ட தனி இடம் தேவை: ரயில்வே அமைச்சரிடம் செந்தில்குமார் எம்.பி கோரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ரயில்களில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட தனி இடம் தேவை என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை திமுக எம்.பி டி.என்.வி.செந்தில்குமார் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதுகுறித்து செந்தில்குமார் அளித்த மனுவில், ‘நாடு முழுவதிலும் ஓடும் ரயில்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட தாய்மார்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதற்காக ரயில் பெட்டிகளில் தனியாக ஓர் இடம் ஒதுக்கினால் பாராட்டுக்குரியதாக இருக்கும்.

அதேபோல், குழந்தைகளுக்கானக் கழிவறை வசதியும் ரயில்களில் சிக்கலாக உள்ளது. கடந்த 1853-ம் ஆண்டு முதல் இந்தியாவில் ரயில்கள் ஓடத் தொடங்கினாலும், அதில் கழிவறைகள் 1909-ம் ஆண்டில்தான் அமைக்கப்பட்டன.

எனவே, தாய்மார்களுக்கான இந்த இரண்டு பிரச்சினைகளையும் அரசு பரிசீலித்து உரிய வசதிகளை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT