பாட்னா: பிஹாரில் நாளந்தா, நவடா, கதிஹார், மாதேபுரா, வைஷாலி, சுபால், அவுரங்காபாத், கயா, சரண் மற்றும் ஜெகனாபாத் ஆகிய பத்து மாவட்டங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டங்களில் இருந்து 100 நிலத்தடி நீர் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மண்டல அதிகாரி தாகூர் பிரமானந்த் சிங் கூறுகையில், ‘தற்போது சந்தேகத்துக்கு இடமான மாவட்டங்களிலிருந்து நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது. ஆய்வு முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
யுரேனியம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலத்தடி நீரில் இருந்தால், அதைப் பயன்படுத்தும் மக்களுக்கு தீவிர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக கிட்னி, எலும்புகள் பாதிக்கப்படும்.