ஆளுநர்களை நீக்க பாஜக அரசு முயற்சி செய்வது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது பல்வேறு மாநில ஆளுநர்களை மாற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இது ஜனநாயக விரோதம். இந்த விஷயத்தில் மத்திய அரசு சர்வாதிகாரப் போக்கு டன் செயல்படுகிறது.
ஆட்சி மாற்றத்தின் காரணமாக மாநில ஆளுநர்களை மாற்றம் செய் யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதனை மத்திய அரசுக்கு இப்போது நினைவுபடுத்த விரும்பு கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் நிலைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறியபோது, அரசியல் காரணங்களுக்காக ஆளுநர்களை மாற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. 40 வருடங்களுக்கு முன் இதுபோல் ஆளுநர்களை மாற்றக் கூடாது என அரசியல் கட்சிகள் சேர்ந்து முடிவு எடுத்தன.
இதனை ஜனசங்கம் என்ற பெயரில் இருந்த பாரதிய ஜனதாவும் ஏற்றுக் கொண்டது. இப்போது பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆளுநர்களை மாற்றுகிறது என்றார்.
சமாஜ்வாதி மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் கூறியபோது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்களை ஆளுநர்களாக நியமித்து மத்திய அரசு மதச் சாயம் பூசப் பார்க்கிறது. இது நம் ஜனநாயக நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்றார்.
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் அலி அன்வர் கூறிய போது, மத்திய அரசின் நடவடிக்கை ஒரு தவறான முன் உதாரணம் என்றார்.
பாஜக பதிலடி
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியபோது, அவர்கள் இடத்தில் நாங்கள் இருந்திருந்தால், இந்நேரம் பதவிகளை ராஜினாமா செய்திருப்போம் என்றார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணியன் சுவாமி கூறிய போது, கடந்த ஆட்சியில் தகுதியின் அடிப்படையில் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6 பேர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் ஆஜரானதால் ஆளுநர் பதவி பெற்றனர். அவர்களாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்வது நல்லது என்றார்.
பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி கூறியபோது, ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் கடந்த ஆட்சி யில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வது மரபாக இருந்து வருகிறது. இதை அரசியலாக்கக் கூடாது என்றார்.