இந்தியா

சீன பட்டாசுகளை புறக்கணித்த வர்த்தகர்கள்: டெல்லியில் களைகட்டும் சிவகாசி பட்டாசுகள்

செய்திப்பிரிவு

டெல்லியில் உள்ள பட்டாசு கடைக் காரர்கள் தேச நலனுக்காக சீன பட்டாசுகளை புறக்கணித் துள்ளனர். இதனால் அங்கு சிவகாசி பட்டாசுகள் விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

சீன வரவுகளால் இந்திய பட்டாசு தொழில்கள் நலிவடைந்து வருவதாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவ தாலும் இந்த ஆண்டு சீன பட்டாசு களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் அண்மையில் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடங்கப்பட்டது. அதற்கு உரிய பலன் டெல்லி சதார் பஜாரில் தற்போது கிடைத்துள்ளது.

வழக்கமாக சீன பட்டாசுகளை விற்கும் இங்குள்ள வர்த்தகர்கள், இந்த ஆண்டு அதனை முற்றிலும் புறக்கணித்துள்ளனர். மேலும் தங்களது நாட்டுப்பற்றை வெளிப் படுத்தும் வகையில் பிரம்மாண்ட பதாகைகளில் ‘இங்கு சீன பட்டாசு கள் விற்கப்பட மாட்டாது’ என்றும் எழுதி தொங்கவிட்டுள்ளனர்.

தவிர பட்டாசுகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களில் பெரும் பாலானோர் ‘இந்திய பட்டாசு தானே’ என கேட்டு வாங்கிச் செல்வ தாகவும் வர்த்தகர்கள் தெரிவிக் கின்றனர். இது குறித்து பட்டாசுக் கடை உரிமையாளரான குமார் கூறும்போது, ‘‘தடை செய்யப்பட்ட பட்டாசுகள் தெருக்களில் தான் விற்கப்படுகின்றன. எங்கள் சந்தைக்குள்ளோ, கடைகளிலோ ஒரேயொரு சீன பட்டாசு கூட விற்பனைக்காக வைக்கப்பட வில்லை. எல்லாமே தமிழகத்தின் சிவகாசியில் இருந்து வந்தவை தான்’’ என்றார்.

மற்றொரு கடை உரிமை யாளரான யஷ்பால், ‘‘எங்கள் கடைக்கு வருபவர்களில் பலர் இந்திய பட்டாசுகளை தான் குறிப்பிட்டு கேட்டு வாங்கிச் செல்கின்றனர். சீனப் பொருட்களை வாங்குவதன் மூலம் மறைமுகமாக அந்நாட்டுக்கு ஆதரவு தந்துவிடக் கூடாது என்பதில் வாடிக்கை யாளர்கள் தெளிவாக இருக் கின்றனர்’’ என்கிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வளர்ந்தாலும், பட்டாசுகளை கொளுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் என்ற மனநிலை மட்டும் மாறவில்லை.

‘‘ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே பட்டாசுகள் வெடிப்பதால் பெரிய அளவுக்கு மாசு ஏற்படப் போவதில்லை. அப்படி ஏற்பட்டா லும் சீன பட்டாசுகளை விட இந்திய பட்டாசுகள் வெளியிடும் மாசு குறைவாகத் தான் இருக்கும்’’ என்று இதற்கு தடாலடியாக பதில் தெரிவிக்கிறார் பட்டாசு கடைக்காரரான தீபக்.

SCROLL FOR NEXT