வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் 4 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தகர்த்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் கேரன் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் மேற்கொண்ட பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் 4 தகர்க்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“கேரன் செக்டாரில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் மேற்கொண்டதில் 4 பாகிஸ்தானிய முகாம்கள் தகர்க்கப்பட்டன” என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
பாகிஸ்தான் தரப்பில் சில உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக கூறிய அவர் மேல் விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சுட்டதில் பி.எஸ்.எஃப் ஜவான் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்தனர். இதற்குப் பதிலடித்தாக்குதல்தான் இது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.