ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் 2ஜி நீதிமன்றம் பிறப்பித்த உத்தர வுக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை, 2ஜி ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதி மன்றம் விசாரித்து வருகிறது. இதை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர்.