இந்தியா

எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

பிடிஐ

காஷ்மீரில் எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள், குடிமக்கள் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த செப்டம்பரில் பாகிஸ்தான் எல்லையில் 5 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ராணுவம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை அக்னூர் ஒட்டிய எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகள், மற்றும் பொது மக்கள் பகுதிகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்தத் தாக்குதலில் இந்திய தரப்பில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து பாதுகாப்புத் துறை வட்டாரத் தகவலில், "பாகிஸ்தான் ராணுவம் கனரக இயந்திரங்கள், பீரங்கிக் குண்டுகளை இந்திய நிலைகளின் மீது வீசியது. இந்தத் தாக்குதலில் எந்தவித பாதிப்பும் இந்திய தரப்பில் ஏற்படவில்லை. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

குறிவைக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள்:

இந்தத் தாக்குதல் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "பாகிஸ்தான் ராணுவத்தினர். குடிமக்கள் இருப்பிடங்களை நோக்கி தாக்குதலை நடத்தியுள்ளனர். சிலரது வீடுகள் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டுள்ளது.

எல்லையோரத்தில் வசித்த பெரும்பான்மையான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

முன்னதாக அக்னூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பல்லன்வாலா, சப்ரியர், சம்னம் பகுதிகளை ஒட்டிய எல்லைப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT