இந்தியா

நீதிமன்றமா அல்லது மீன் சந்தையா?- உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் தலைமை நீதிபதி கண்டிப்பு

செய்திப்பிரிவு

மூத்த நீதிபதிகள் அந்தஸ்து வழங்குவதில் பார் கவுன்சில் பாரபட்சமாக செயல்படுகிறது. இந்த தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை தேவை என்று கோரி வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது இரு பிரிவு வழக்கறிஞர்கள் ஒரு வரையொருவர் குற்றம்சாட்டி கோஷமிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், இது நீதிமன்றமா அல்லது மீன் சந்தையா, வழக்கறிஞர்கள் அமைதி காக்காவிட்டால் வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கண்ணியம் காக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோருவது எப்படி என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT