இந்தியா

சவர்க்கரும் கோட்சேயும் வேறுவேறு அல்ல: மீண்டும் இந்து மகாசபை சர்ச்சைக் கருத்து

மொகமட் அலி

தேசத் தந்தை மகாத்மா காந்தி ஜெயந்தி அன்று நதுராம் கோட்சேயை பாராட்டி, சவர்க்கரையும் கோட்சேயையும் பாஜக பிரித்துப் பார்க்கக் கூடாது என்று கூறியுள்ளது இந்து மகாசபா.

காந்தி ஜெயந்தியான இன்று மீரட்டில் கோட்சேயிற்கு சிறப்புப் பூசை ஏற்பாடு செய்த இந்து மகா சபை தேசிய துணை தலைவர் பண்டிட் அசோக் சர்மா கோட்சேயை தேச நாயகன் என்று வர்ணித்தார்.

“சவர்க்கரைப் போலவே கோட்சேயின் பங்களிப்பை பாஜக புரிந்து கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சந்தர்பவாத அரசியல் அவர்களை கோட்சேயை ஏற்றுக் கொள்ள முடியாமல் செய்துள்ளது. கோட்சே வழிமுறையை அவர்கள் ஏற்றுக் கொள்ள தைரியமற்றவர்களாகி விட்டனர்.

மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்ற இல்லத்தில் உள்ள சவர்க்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறது எனும்போது கோட்சேயிற்கு இத்தகைய மரியாதையை அவர்கள் வழங்க வேண்டும். கோட்சே, சவர்க்கர் இருவரும் ஒரே கொள்கை நீரோட்டத்திலிருந்து வந்தவர்கள்தான். இவர்களை பிரித்துப் பார்க்கக் கூடாது. ஆனால் இந்தக் கொள்கையைக் கண்டு ஆர்.எஸ்.எஸ்., பாஜக அஞ்சுகிறது”

இவ்வாறு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT