இந்தியா

ராணுவ துல்லிய தாக்குதல்: மியான்மரில் நடத்திய தாக்குதல் பாணி

செய்திப்பிரிவு

இந்திய ராணுவம் மட்டுமன்றி அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் துல்லியமான தாக்கு தல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) ராணுவ நடவடிக்கையை மேற்கொண் டுள்ளன.

இந்திய ராணுவ தாக்குதல்

கடந்த 2015 ஜூன் 4-ம் தேதி மணிப்பூரின் சண்டல் பகுதியில் நாகா தீவிரவாதிகள் 18 இந்திய வீரர்களைக் கொலை செய்தனர். இதற்குப் பதிலடியாக மியான்மர் எல்லைக்குள் ஹெலிகாப்டர்கள் மூலம் தரையிறங்கிய 70 இந்திய வீரர்கள் அங்கு பதுங்கியிருந்த 50 நாகா தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர்.

பின்லேடன் படுகொலை

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றனர்.

யூதர்கள் மீட்பு

கடந்த 1976 ஜூனில் பாலஸ்தீன தீவிரவாதிகள், ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானத்தைக் கடத்தி உகாண்டாவின் எண்டப் விமான நிலையத்துக்குக் கொண்டு சென் றனர். மற்ற பயணிகளை விடுவித்து விட்டு 105 யூதர்களை மட்டும் சிறை வைத்தனர்.

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாகச் செயல்பட்டு 5 விமானங்களில் எகிப்து, சவுதி அரேபியா, சூடான் நாடுகளின் ரேடார்களிடம் தப்பி எண்டபி விமான நிலையத்தில் தரையிறங்கினர். 8 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இஸ்ரேல் தரப்பில் ஒரு வீரர், 3 பயணிகள் மட்டும் உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு இஸ்ரேல் திரும்பினர்.

அமெரிக்காவின் தோல்வி

கடந்த 1961-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி உத்தரவின்பேரில் சிஐஏ-வால் ஏவப்பட்ட 1200 கியூபா நாட்டுக் காரர்கள் பிக்ஸ் வளைகுடா வழியாக கியூபாவுக்குள் நுழைந்தனர். இந்த முயற்சியை பிடல் காஸ்ட்ரோ படை முறியடித்தது. 100 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் கைது செய்யப் பட்டனர்.

கடந்த 1979 நவம்பரில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய 53 அமெரிக்கர்களை அந்த நாட்டு மாணவர் அமைப்புகள் சிறைபிடித்தன. அவர்களை மீட்க அமெரிக்காவின் சிறப்பு படை அனுப்பப்பட்டது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 8 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். பிணைக்கைதிகள் யாரும் மீட்கப்படவில்லை.

SCROLL FOR NEXT