பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணை தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரிடம் மத்திய அரசு நேற்று விளக்கமாக எடுத்துரைத்தது. அத்துடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காஷ்மீர் ஆளுநர் என்.என்.ஓரா, காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோரிடமும் நடந்த விவரங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் முகாம்கள் மீது எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது, அதன் விளைவுகள் என்ன என்பது போன்ற அனைத்து விவரங்களும் அவர்களுக்கு எடுத்துரைக்கப் பட்டுள்ளது.