காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க புதிய முயற்சிகளை ராணுவம் கையாளத் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூலை 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப் பட்டதால் வெடித்த வன்முறையும் பதற்றமான சூழலும் தொடர்ந்து நீடிப்பதால், காஷ்மீர் பகுதிகளில், 82-வது நாளாக நேற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
பிரிவினைவாதிகளின் பேரணி காரணமாக, குல்காம் மாவட்டத் தின் கொய்மோ நகரில் நேற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந் தது. மற்ற இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், காஷ்மீரில் பல பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் தனியார் வாகனங்கள் ஆங் காங்கே இயங்குகின்றன. எனினும், காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடைகள், பெட் ரோல் நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்றவை தொடர்ந்து மூடியே கிடக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலால் காஷ் மீர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியை போக்க, அனந்த்நாக் மாவட்டத்தின் பொறுப்பாளரான கர்னல் தர்மேந்திர யாதவ் தலைமையிலான வீரர்கள் புதுமையான முயற்சியில் ஈடு பட்டுள்ளனர்.
மிகவும் பதற்றமான பகுதி கள் அடங்கிய அனந்த்நாக் மாவட்டத்தில் தனது கட்டுப் பாட்டுக்கு உட்பட்ட கிராமங் களில் உள்ளூர்வாசிகள், முதிய வர்கள், சிறுவர்களைச் சந்தித்து கலந்துரையாடுகிறார். வர்த்தகர் களைச் சந்தித்து சட்டம் ஒழுங்கு குறித்த நம்பிக்கை அளித்து கடைகளை திறக்கச் சொல்கிறார்.
பள்ளிகள் திறக்காததால், மாணவர்களின் படிப்பு நில வரம் குறித்து அக்கறையோடு விசாரிக்கிறார். துயரத்தில் இருக்கும் வயது முதிர்ந்தவர் களையும், சிறுவர்களையும் அவர் வாஞ்சையோடு கட்டியணைத்து ஆசுவாசப்படுத்துவதை வழக்க மாகக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, ‘சில ஆண்டுகளுக்கு முன், முன்னாபாய் எம்பிபிஎஸ் (தமிழில் வசூல்ராஜா எம்பிபிஎஸ்) திரைப்படம் பார்த்தேன். அதில் வரும் ஃபார்முலாவை (கட்டிப் பிடி வைத்தியம்) பின்பற்று கிறேன்’ என்றார். புர்ஹான் வானி என்கவுன்டர் நடவடிக்கையில் ஈடுபட்ட இளம் ராணுவ வீரர்களில் தர்மேந்திர யாதவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சோபியான் மாவட்டம், துக்ரூ கிராமத்தில் சிபிஐ எம்எல்சி அப்துல் ரஹ்மானின் வீட்டில் பாதுகாவ லரின் அறையில் இருந்த ஏகே-47 துப்பாக்கி திருடுபோனது. அப்துல் ரஹ்மான் வீட்டுக்கு வந்த அவரின் உறவினர் வாசிம் அகமது பாதுகாவலருக்கு தெரியாமல் துப்பாக்கி மற்றும் 30 தோட்டக்களை எடுத்துக்கொண்டு தலைமறைவானதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.