கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ‘கிசான் யாத்திரை’ மேற் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஷாஜகான் பூரில் பொதுமக்களிடையே அவர் பேசும்போது, “தியோரியா நகரில் இருந்து டெல்லி செல்லும் எனது இந்த யாத்திரையில் தெருக்களில் சுற்றித் திரியும் பசுக்களின் அவல நிலையைக் காண்கிறேன்.
பசுக்களின் பாதுகாப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி எதுவும் செய்யவில்ல. ஆனால் தேர்தல் ஆதாயம் கருதி இந்த விவகாரத்தை அவர் எழுப்புகிறார்.
நாட்டின் பல்வேறு பகுதி களிலும் பசுக்கள் தெருக்களில் சுற்றித் திரிகின்றன. கவனிப் பாரின்றி அவை இறக்கின்றன. ஆனால் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசியல் மட்டுமே நடைபெறுகிறது.
காங்கிரஸ் மட்டுமே தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி யுள்ளது. ” என்றார்.